Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5211
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorShiyana, M.M.-
dc.contributor.authorJazeel, M.I.M.-
dc.date.accessioned2021-01-06T09:46:39Z-
dc.date.available2021-01-06T09:46:39Z-
dc.date.issued2020-
dc.identifier.citationKALAM -International Research Journal, 13(1),2020; 99-113.en_US
dc.identifier.urihttp://ir.lib.seu.ac.lk/handle/123456789/5211-
dc.description.abstractபலதார மணம் பற்றிய வாதமானது சமீபத்தில் அறிஞர்கள், பாரம்பரியவாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பெண்ணியவாதிகள் ஆகியோரின் கவனத்தை ஈர்த்துள்ளதுள்ளது. இந்நிலையில் பலதாரமணம் பற்றிகிண்ணியாபிரதேசத்திலுள்ள பலதார குடும்பங்களை சேர்ந்த மூத்த தாரங்களின்; கருத்து நிலையை இணங்காணுதலும் அதனை இஸ்லாமிய நோக்கில்பகுப்பாய்வு செய்வதுமேஇவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வுக்காக முதல் நிலைத்தரவாக குறிக்கோள் மாதிரி முறையில் பலதாரமணியாளர்கள் நேர்காணப்பட்டதுடன்;தரவுகள் குறியீட்டு முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்;ளன. ஆய்வுக்குரிய கோட்பாட்டம்சங்களைப் பெறுவதற்கு இலக்கிய மீளாய்வுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வின் கண்டறிதல்களாக,பலதாரமண வாழ்வில் ஒவ்வொரு பெண்ணினதும் அறிவு நிலை, அனுபவம், சூழல் என்பன ஆளுக்காள் வித்தியாசப்படுகிறது.பெரும்பாலான மறுமணங்கள் மூத்த மனைவியின் ஒப்புதலின்றி நடைபெற்று இருப்பதோடு கணவனின் மற்றுமொரு திருமணத்தினைத் தொடர்ந்து முதல் மனைவிகளில் உட, உளமற்றும் சமூக பிரச்சினைகள்நீண்ட காலமாக தொடர்ந்து வெளிவருவதாகவும் அறியமுடிகிறது.தனது கணவன் தனக்கு மட்டுமே உரியவன் எனும் மனநிலை,கிண்ணியா பிரதேசத்தின் பிரத்தியோக சூழல்,பெண்களின் மனோபாவம், குடும்ப வாழ்வு தொடர்பான விழிப்புணர்வின்மை,மற்றுமொரு திருமணத்துக்கான ஆண்களின் பிழையானஅணுகுமுறைகளும்பலதாரமணம் குறித்த எதிர்மறையான கருத்தமைவுக்கு காரணமாக அமைகிறது.இந்நிலையானது கணவன்-மனைவி உறவிலும் பெற்றோர்-பிள்ளை உறவிலும் சகமனைவிமார்களுக்கு இடையிலான உறவு நிலையிலும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை தோற்றுவித்திருக்கிறது.பலதாரமணம் குறித்த சார்புநிலை வாதங்கள் கிண்ணியா வாழ் மூத்த தாரங்களுக்கு மத்தியில் மிகக்குறைவாக இருப்பதோடுஒப்பீட்டளவில் எதிர்மறையான கருத்து நிலைகளே மேலோங்கியும்காணப்படுகின்றன.நடைமுறையில் பலதாரமணத்தினுள் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு சட்டரீதியான தீர்வுகளை வழங்குவதில் அக்கறை கொள்வதுடன்பலதார குடும்பங்களுக்கான மார்க்க போதனைகளை நடைமுறைப்படுத்த, உருவாக்க, செயல்படுத்த, மதிப்பீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை முஸ்லிம் குடும்பங்களுக்கு உணர்த்த வேண்டும்;.மேலும்பெண்களின் மன ஆரோக்கியத்தில் பலதாரமணம் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்தும் தற்காலத்தில் கூடுதல் ஆராய்ச்சி நடத்தப்பட வேண்டும்.en_US
dc.publisherFaculty of Arts and Culture, South Eastern University of Sri Lankaen_US
dc.subjectபலதாரமணம்en_US
dc.subjectமுதல் தாரம்en_US
dc.subjectகுடும்பம்en_US
dc.subjectகருத்து நிலைen_US
dc.subjectகிண்ணியாen_US
dc.titleபலதாரமணம் குறித்து முதல் தாரங்களின்கருத்தாக்கம்: கிண்ணியா பிரதேச நிலை பற்றிய ஆய்வுen_US
dc.title.alternativePerception of 1st wivis on polygany: A case study Kinniya regionen_US
dc.typeArticleen_US
Appears in Collections:Volume 13 Issue 1

Files in This Item:
File Description SizeFormat 
8. K2020-26-Jazeel (99-113).pdf447.49 kBAdobe PDFThumbnail
View/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.