Please use this identifier to cite or link to this item:
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/3590
Title: | பாடசாலைகளில் முரண்பாடுகளை முகாமை செய்வதில் அதிபர்களின் வகிபங்கு |
Other Titles: | Role of the principals in conflict management in schools |
Authors: | Paunanthie, A. |
Keywords: | Type – I schools Conflict management Role of principal வகை - I பாடசாலைகள் முரண்பாட்டு முகாமை அதிபர்கள் வகிபங்கு |
Issue Date: | 17-Dec-2018 |
Publisher: | South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka |
Citation: | 8th International Symposium 2018 on “Innovative Multidisciplinary Research for Green Development”. 17th - 18th December, 2018. South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka. pp. 417-428. |
Abstract: | இது ஒரு அளவைநிலை (Survey research) ஆய்வாகும். முகாமைத்துவம் சார்ந்த அணுகுமுறைகள் விஞ்ஞான ரீதியாக மாற்றமடைந்து வருகின்ற இன்றைய சூழலில் பாடசாலை அதிபர்களின் முகாமைத்துவ அணுகுமுறைகள் சார்ந்தும் பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. தனிமனித வேறுபாடுகளைக் கொண்ட பலர் பங்கெடுக்கின்ற பாடசாலைச் செய்பாடுகளில் ஏற்படுகின்ற முரண்பாடுகளை முகாமை செய்வதில் முதல்தர முகாமையாளராக விளங்குகின்ற அதிபர்களின் பங்கு முக்கியமானது. பாடசாலைகளில் முரண்பாடுகளை முகாமைசெய்வதில் அதிபர்களின் வகிபங்கு என்னும் தலைப்பிலான இந்த ஆய்வு யாழ்ப்பாணத்திலுள்ள வடமராட்சிக் கல்வி வலயத்துக்கு உட்பட்ட வகை - I பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வகை - I பாடசாலை என்பது IAB மற்றும் IC பாடசாலைகளைக் குறிக்கும். இதற்காக அளவு ரீதியான தரவுகளும் (Quantitative data)பண்பு ரீதியான தரவுகளும் (Qualitative data) பெறப்பட்டுள்ளதால் இது கலப்பு ஆய்வாக (Mixed method) முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட தரவுகள் விவரணப் புள்ளிவிபரவியல் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட்டு நூற்று வீதம், இடை ஆகியன கணிக்கப்பட்டு அட்டவணைகள் மற்றும் வரைபுகள் மூலம் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இங்கு படைகொண்ட மாதிரியெடுத்தல் (Stratified Random Sampling) மூலம் 20 பாடசாலைகளைச் சேர்ந்த 265 ஆசிரியர்கள், 20 அதிபர்கள், 20 பிரதி அதிபர்கள் ஆய்வு மாதிரிகளாகத் தெரிவுசெய்யப்பட்;டுள்ளனர். ஆசிரியர்கள், அதிபர்களுக்கான வினாக்கொத்து, பிரதி அதிபர்களுடனான கட்டமைக்கப்பட்ட நேர்காணல் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட தரவுகள் திரட்டப்பட்டுள்ளன. முரண்பாடுகளை முகாமைசெய்வதில் அதிபர்களின் வகிபங்கினை இனங்காண்பதும் முரண்பாடுகளை வெற்றிகரமாக முகாமைசெய்வதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதுமே இந்த ஆய்வின் நோக்கங்களாக அமைகின்றன. தரவுகள் மூலம் பெறப்பட்ட ஆய்வு முடிவுகளில் பின்வருவன முக்கியத்துவம் பெறுகின்றன. முரண்பாடுகளை ஆரம்பத்திலேயே இனங்கண்டுகொள்வது அவற்றை முகாமை செய்ய இலகுவாக அமையும். அதிபர் நட்பு ரீதியாக அணுகுவதன் மூலம் முரண்பாடுகளை முகாமை செய்வதையே ஆசிரியர்கள் வரவேற்கின்றனர். முரண்பாடுகளை முகாமை செய்யும்போது அதிபர்கள் தாம் பதற்றமடைவதில்லை என்று கூறியுள்ளனர். அதிபர்களின் அனுபவம் முரண்பாடுகளை முகாமை செய்வதில் செல்வாக்குச் செலுத்துகின்றது. அதிபர் தனித்து அல்லாமல் ஏனைய முகாமைத்துவ அங்கத்தவர்களையோ ஆசிரியர்களையோ இணைத்துக்கொண்டு முரண்பாடுகளை முகாமை செய்வது சிறந்தது என்ற கருத்தை ஆசிரியர்கள் பலர் வெளிப்படுத்தியிருந்தனர். ஆசிரியர்களுக்கு கடமைகள், பொறுப்புக்களைப் பகிர்ந்தளிக்கின்றபோது ஏனையவர்களுடன் கலந்துரையாடி பொருத்தமான பொறிமுறைகளைக் கையாண்டு பகிர்தளிக்க வேண்டும் என்ற கருத்து அதிகமானவர்களால் முன்வைக்கப்பட்டது. அதிபர்களில் மிகச் சிலரே பாடசாலையில் காணப்படும் முரண்பாடுகளை பாடசாலையின் வளர்ச்சிக்குப் பயன்படக்கூடிய வகையில் கையாளும் ஆற்றல் படைத்தவர்களாகக் காணுப்பட்டனர். வெளிப்படைத் தன்மையோடு ஆரோக்கியமான தொடர்பாடலை மேற்கொள்வதன் மூலமும் முரண்பாடுகளை முகாமை செய்வது இலகுவானதாகும். பலவேளைகளில்; அதிபர்கள் தமது அதிகாரத்தை அல்லது வலுவைப் பயன்படுத்தியே முரண்பாடுகளை முகாமை செய்ய முற்படுகின்றனர். அதனை ஆசிரியர்கள் பெருமளவில் ஆதரிக்கவில்லை. அடிக்கடி முரண்பாடுகளில் ஈடுபடுபவர்களை அதிபர்கள் இடமாற்றத்துக்கு உட்படுத்தும் உத்தியையும் கையாள்கின்றனர். இவ்வாறு பாடசாலைகளில் முரண்பாடுகளை முகாமை செய்வதில் அதிபர்கள் முக்கியமான வகிபங்கினை ஆற்றுகின்றனர். |
URI: | http://ir.lib.seu.ac.lk/handle/123456789/3590 |
ISBN: | 978-955-627-141-6 |
Appears in Collections: | 8th International Symposium - 2018 |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
Full papers 417-428.pdf | 5.42 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.