Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/972
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorSoba, Balasundaram
dc.date.accessioned2015-10-09T09:25:22Z
dc.date.available2015-10-09T09:25:22Z
dc.date.issued3/4/2015
dc.identifier.citationSecond International Symposium -2015, pp 205-211
dc.identifier.issn9.79E+12
dc.identifier.urihttp://ir.lib.seu.ac.lk/handle//123456789/972
dc.description.abstractமனித விழுமியங்களை வளர்த்தெடுப்பதில் கல்வியின் பங்கு எந்தளவிற்கு முக்கியத்துவமுடையதாக விளங்குகின்றதோ, அந்தளவிற்குக் கற்றல் கற்பித்தற் செயற்பாடுகள் மேம்மையடைய ஒழுக்கம்சார் விழுமியங்களின் பங்களிப்பு இன்றியமையாததாகவுள்ளது. கற்றல் கற்பித்தற் செயற்பாடுகள் சிறப்படைவதற்கு ஒழுக்கம் சார் விழுமியங்கள் எந்தளவிற்கு பங்களிப்புச் செய்கின்றது என்பதைக் கண்டறியும் பொருட்டு யுத்தத்தினால் இடம் பெயர்ந்து மீளக் குடியமர்த்தப்பட்ட மண்முனை தென்மேற்குப் பிரதேசம் ஆய்வுப் பிரதேமாக தெரிவு செய்யப்பட்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுப் பிரதேசத்திற்குட்பட்ட மாணவர்கள் இடம் பெயர்வினால் குறிப்பிட்ட காலங்களில் கல்வியைத் தொடர முடியாமல் முகாம்களில் தங்கியிருந்த காலப்பகுதியில் மாணவர்களிடத்தே வன்முறைகள், திருட்டு, பொய் கூறல் போன்றவாறான தீய நடத்தைகள் உருவானதோடு, இன்றும் காணக்கூடியதாகவுள்ளது. ஆய்வுக்குட்படுத்திய பாடசாலை மாணவர்களிடத்தே ஒழுக்கம் சார் விழுமியப் பண்புகள் எவ்வாறுள்ளது? மாணவர்களிடையே விழுமியப் பண்புகள் குறைவாகக் காணப்படுவதற்கான காரணங்கள், விழுமியப் பண்புள்ள மாணவர்கள் வகுப்பறையில் காணப்படும் போது எந்தளவிற்குக் கற்றல் கற்பித்தற் செயற்பாடுகள் வெற்றியளிக்கின்றது, விழுமியப் பண்புகள் இல்லாத நிலையில் மாணவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் போன்றவற்றை அறிந்து இவற்றுக்கான தீர்வுகளை முன்வைக்கும் முகமாக இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரச்சினைகளை ஆய்வு செய்தல், மாணவர்களின் இயல்புகள், நடத்தை (Behaviour) ஆகிய செயற்பாடுகளை விளக்குவதோடு, தரவுப்பகுப்பாய்வு முறையாக அதிகளவு பண்பறிசார் முறை பயன்படுத்தப்பட்டுள்ளமையினால் இவ்வாய்வானது விபரண ஆய்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 12 பாடசாலைகள் ஆய்வு மாதிரியாகத் தெரிவு செய்யப்பட்டு அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களிடமிருந்து வினாக் கொத்து, நேர்காணல், அவதானம் போன்றவற்றின் மூலம் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் சார்பாக தீர்வாலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.en_US
dc.language.isootheren_US
dc.publisherFaculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lankaen_US
dc.subjectஒழுக்கம் சார் விழுமியப் பண்புகள்en_US
dc.subjectநெறிபிறழ்வான நடத்தைகள்en_US
dc.subjectகற்றல் கற்பித்தற் செயற்பாடுen_US
dc.subjectமேம்பாடுen_US
dc.titleவகுப்பறைக் கற்றல் கற்பித்தல் மேம்பாட்டில் ஒழுக்கம் சார் விழுமியங்களின் பங்களிப்பு (இடைநிலைப் பிரிவு மாணவர்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)en_US
dc.typeConference paperen_US
Appears in Collections:2nd International Symposium of FIA-2015



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.