
Please use this identifier to cite or link to this item:
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/7789| Title: | நபிவழி மருத்துவம்: ஓர் இஸ்லாமிய சட்டவியல் பகுப்பாய்வு |
| Other Titles: | Prophetic medicine: an analytical study through Islamic law |
| Authors: | Mazahir, S. M. M. Suhaima, M. R. J. Islamic Studies |
| Keywords: | நபிவழி மருத்துவம் இஸ்லாம் சட்டவியல் |
| Issue Date: | 2024 |
| Publisher: | Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka |
| Citation: | Abstract Compilation of Undergraduate Dissertation (Academic Year 2007/2008 to 2020/2021) |
| Abstract: | இன்றைய உலகில் ஆங்கில மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், நபிவழி மருத்துவம், ஹோமியோபதி என இன்னும் பல மருத்துவ முறைகள் பல்வேறு ஆய்வுகளுடன் இணைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இஸ்லாம் ஒரு பூரண மார்க்கம் என்ற வகையில் வாழ்வின் அனைத்து விவகாரங்களுக்கும் அது சரியான வழிகாட்டல்களை வழங்குகின்றது. சர்வதேச மட்டத்தில் நபிவழி மருத்துவம் குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும் விவாதங்கள் நடாத்தப்பட்டும் வருகின்ற போதும் அது குறித்த சரியான புரிதல் இல்லாதிருப்பதை அவதானிக்க முடிவதுடன் இதனை எவ்வாறு அணுக வேண்டும் என்பதில் எதிரும் புதிருமான கருத்துக்கள் நிலவி வருகின்றது. எனவே, இந்த நடைமுறையை எவ்வாறு அணுக வேண்டுமென்பது பற்றிய பரிசீலனை மிக முக்கியமானதாகும் என்ற வகையில் இவ்வாய்வு நபிவழி மருத்துவத்தின் சட்டவியல் நிலைமையை கண்டறியும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ளது. பண்புசார் முறையில் அமைந்துள்ள இவ்வாய்வில் முதலாம், இரண்டாம் நிலைத் தரவுகள் பயன்படுத்தப்படவுள்ளன. இவ்வாய்வுக்கான முதலாம் நிலைத் தரவுகள் நோக்க மாதிரி (Purposive Sampling) அடிப்படையில் தெரிவு செய்யப்படவுள்ள 10 நபர்களுடன் அரை கட்டமைக்கப்பட்ட (Semi-Structured Interview) நேர்காணல் மேற்கொள்ளப்படவுள்ளது. நேர்காணல் மூலம் பெறப்படவுள்ள தரவுகள் குறியீட்டுப் பகுப்பாய்வு முறை மூலம் (Coding Method) பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது. இவ்வாய்வுக்கான இரண்டாம் நிலை தரவுகள் இஸ்லாத்தின் மூல ஆவணங்களான அல்குர்ஆன், அல்ஹதீஸ் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள், சஞ்சிகைகள், இணையத்தள ஆக்கங்கள் போன்றவற்றில் காணப்படும் நபிவழி மருத்துவம் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு உள்ளடக்கப் பகுப்பாய்வு (Content Analysis) முறை மூலம் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, முடிவுகள் முன்வைக்கப்படள்ளன. இவ்வாய்வானது நபிவழி மருத்துவம் பற்றிய ஷரீஆவினால் அங்கீகரிக்கப்பட்ட சட்ட ரீதியான கருத்து முரண்பாடுகள் பற்றிய தெளிவைப் பெறவும், இஸ்லாமிய அறிஞர்களினால் பின்பற்றப்பட்டு வரும் நபிவழி மருத்துவம் தொடர்பான அணுகுமுறைகளை விளங்கவும், இலங்கை வாழ் முஸ்லிம்களிடத்தில் நபிவழி மருத்துவம் தொடர்பான முரண்பாடுகளில் வலுவானதை அணுகும் முறை பற்றிய தெளிவைப் பெறவும் உறுதுணையாக அமையவல்லது. |
| URI: | http://ir.lib.seu.ac.lk/handle/123456789/7789 |
| Appears in Collections: | Bachelor of Arts Honours in Islamic Law and Legislation |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| Islamic Law and Legislation 143-144.pdf | 434.5 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.