
Please use this identifier to cite or link to this item:
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/7775| Title: | குடும்ப வன்முறையை தடுப்பதில் இஸ்லாமியக் குடும்பச் சூழல்: கொழும்பு பிரதேசத்தில் பஸ்ஹ் விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்களிடையிலான ஆய்வு |
| Other Titles: | The Islamic family environment in preventing domestic violence; a survey amoung the fasah divorced Muslim women in Colombo area |
| Authors: | Jazeel, M. I. M. Hilma, L. F. Islamic Studies |
| Keywords: | குடும்ப வன்முறை பஸ்ஹ் விவாகரத்து இஸ்லாமியக் குடும்பச் சூழல் கொழும்பு முஸ்லிம்கள் |
| Issue Date: | 2024 |
| Publisher: | Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka |
| Citation: | Abstract Compilation of Undergraduate Dissertation (Academic Year 2007/2008 to 2020/2021) |
| Abstract: | உலகளாவிய ரீதியில் பெண்களுக்கு எதிரான வன்முறை இடம்பெற்று வருவதோடு கணவன்- மனைவிக்கிடையில் ஏற்படும் குடும்ப வன்முறைகளே அவற்றில் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன. இஸ்லாம் வன்முறையை முற்றாக தடுக்கிறது. அது குடும்ப வாழ்க்கைத் தொடர்பாக பல போதனைகளை வழங்கியுள்ள போதிலும் முஸ்லிம் குடும்பங்களிலும் வன்முறைகள் இடம்பெறுகின்றன என்பதும் அறியக் கூடியது. கொழும்புப் பிரதேச முஸ்லிம் குடும்பங்களில் வன்முறைகள் அதிகரித்து வருகின்றமை குடும்ப சிதைவிற்கும், பஸ்ஹ் விவாகரத்துக்கும் காரணமாக அமைகின்றது. இந்நிலையில் இவ்வாய்வானது கொழும்பு முஸ்லிம் குடும்பங்களில் இடம்பெறும் வன்முறைகளை பரிசீலித்து அதனை இஸ்லாமிய கண்ணோட்டத்தில் பகுப்பாய்வு செய்து அக்குடும்பங்களில் இஸ்லாமிய குடும்பச் சூழல் பேணப்பட்டதா என அறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அளவு மற்றும் பண்பு ரீதியான ஆய்வு முறையியலினைக் கொண்டு முதலாம் நிலைத்தரவுகளுக்காக கொழும்புப் பிரதேச 4 காழி நீதிமன்றங்களில் 2018, 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குடும்ப வன்முறை காரணமாக பஸ்ஹ் விவாகரத்து பெற்ற 100 முஸ்லிம் பெண்களிடம் வினாக்கொத்துக்கள் விநியோகிக்கப்பட்டன. மற்றும் குறிக்கோள் மாதிரியைப் பயன்படுத்தி 10 பேருடன் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டன. பெறப்பட்ட தகவல்கள் அனைத்தும் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டன. இரண்டாம் நிலைத்தரவுகளுக்காக காழி நீதிமன்ற ஆவணங்கள், பதிவுப் புத்தகங்கள் மீளாய்வுக்கு உற்படுத்தப்பட்டன. அதனுடன் இஸ்லாமியக் குடும்பவியல் தொடர்பான தகவல்கள் கோட்பாட்டு ரீதியில் விளக்கப்பட்டன. மேலும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு இஸ்லாமிய குடும்பச் சூழலின் அவசியத்தை உணர்த்திக்காட்டி வன்முறையின் தாக்கத்தினை இழிவாக்கவும் இவ்வாய்வு முனைகின்றது. முஸ்லிம் குடும்பங்களில் இஸ்லாமிய குடும்பவியல் கூறுகள் முறையாகப் பேணப்படாமையே முரண்பாடுகளும், குடும்ப வன்முறைகளும் நிகழ்வதற்கு காரணமாய் அமைந்துள்ளது என்பதும், அதன் மூலமாகவே பஸ்ஹ் விவாகரத்துக்களும் அதிகம் இடம் பெற்றுள்ளது என்பதும் கொழும்புப் பிரதேச பஸ்ஹ் விவாகரத்து பெற்ற பெண்களிடம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட உண்மைகளாகும். அதனைத் தடுக்கும் ஆலோசணைகளையும் இவ்வாய்வின் மூலம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. |
| URI: | http://ir.lib.seu.ac.lk/handle/123456789/7775 |
| Appears in Collections: | Bachelor of Arts Honours in Islamic Law and Legislation |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| Islamic Law and Legislation 118-119.pdf | 423.66 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.