Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/7770
Title: சம்மாந்துறை குவாசி நீதிமன்றத்தின் செயற்பாடுகள்: ஓர் ஆய்வு
Other Titles: practices of Sammanthurai Quazi court: a case study
practices of Sammanthurai Quazi court: a case study
Authors: Jazeel, M. I. M.
Rakeeza, A. R. F.
Islamic Studies
Keywords: சம்மாந்துறை
காழி, நீதிமன்றம்
செயற்பாடுகள்
Issue Date: 2024
Publisher: Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka
Citation: Abstract Compilation of Undergraduate Dissertation (Academic Year 2007/2008 to 2020/2021)
Abstract: இலங்கையில் முஸ்லிம்களுக்கான தனியார் சட்ட மரபு ஆரம்ப கால முதலிருந்தே வழக்கிலிருந்துள்ளது. இதன் விளைவாக முஸ்லிம் தனியார் சட்டம் ஏற்படுத்தப்பட்டு அதன் கீழ் குவாஸி நீதிமன்றங்கள் நிறுவப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. பிரதான முஸ்லிம் பிரதேசங்களில் ஒன்றான சம்மாந்துறைப் பிரதேசத்தில் செயல்படும் குவாஸி நீதிமன்றம் செயற்பாடுகளை பரிசீலித்தலையும் அதனால் வழங்கப்பட்ட தீர்ப்புக்களை மதிப்பீடு செய்தலையும் இவ்வாய்வு நோக்காகக் கொண்டுள்ளது. பண்பு ரீதியான இவ்வாய்வு, நேரடி அவதானம், நேர்காணல் ஆகிய முறைமையில் தகவல்களைப் பெற்று பகுப்பாய்விற்கும் மேலும் இந்நீதிமன்றத்தின் ஆவணங்களையும் மீளாய்வுக்கும் உட்படுத்தியுள்ளது. விளைவாக இவ்வாய்வு சம்மாந்துறை குவாஸி நிதிமன்றம் அதன் நீதிப்பரிபாலன எல்லைக்குட்பட்ட முஸ்லிமகளது விவாக, விவாகரத்து, தாபரிப்பு ஆகிய விடயங்களில் பிணக்குகளை தீர்ப்பதில் பங்களிப்புக்கள் வழங்கியுள்ளது. காழி நீதிமன்ற செயற்பாடுகள் முன்னேற்றமடைந்து வருகின்றன. இருந்த போதிலும் காலத்தின் தேவைகளுக்கும் எதிர்பார்ப்புக்கும் போதியனவாக இல்லை. இக்காழி நீதிமன்றம் வழங்கிய திர்ப்புக்கள் பற்றிய பொதுவான ஏற்புடமை நிலவுகின்றது என்பதும் இவ்வாய்வின் கண்டறிதல்களாகும். பொதுவாக குவாஸி நீதிமன்றம், செயற்பாடுகள் குறிப்பாக சம்மாந்துறை குவாஸி நீதிமன்றத்தின் நடைமுறைகளை மேம்படுத்திக் கொள்வதற்கான விதந்துரைகளுக்கு இவ்வாய்வின் கண்டறிதல்கள் வழிகோலாக அமைய வல்லது.
URI: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/7770
Appears in Collections:Bachelor of Arts Honours in Islamic Law and Legislation

Files in This Item:
File Description SizeFormat 
Islamic Law and Legislation 111.pdf420.22 kBAdobe PDFView/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.