Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/6794
Title: தீவகத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் - சாட்டி பிரதேசத்தினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
Authors: செந்தில்குமரன், ஜனனி
Keywords: தொல்லியல்ஆய்வுகள்
சாட்டி
தீவகம்
பெருங்கற்காலம்
Issue Date: 3-May-2023
Publisher: South Eastern University of Sri Lanka Oluvil, Sri Lanka
Citation: 11th International Symposium (IntSym 2023) Managing Contemporary Issues for Sustainable Future through Multidisciplinary Research Proceedings 03rd May 2023 South Eastern University of Sri Lanka p. 358-363.
Abstract: ஆசியாவில் நீண்ட கால பாரம்பரிய வரலாற்றுத்தொன்மை மற்றும் பல்லிணப்பண்பாட்டு அம்சங்கள் கொண்ட நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் வடபகுதி தற்போதைய யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய நிர்வாக மாவட்டங்களை குறிப்பதாகும். யாழ்ப்பாணத்தில் தீவகப்பிரதேசமானது தனித்துவமாக விளங்குகின்றது. வட இலங்கையை பொறுத்த வரையில் கி.பி 14ம் நூற்றாண்டின் முன்னரான வரலாறு புகைப்படிந்ததாகவே காணப்பட்டது. தொடர்ச்சியான வரலாறுகள் தெளிவு இன்மையாலும் இலக்கியங்களில் வரலாறுகள் மறைமுகமாக கூறப்பட்டமையாலும் வடஇலங்கை வரலாறு பற்றி அறிய முடியவில்லை. ஆனால் பிற்காலத்தில் வளர்ச்சி அடைந்த தொல்லியல் துறையினால் புதுவெளிச்சம் அடைந்தது. இவ் தொல்லியல் ஆய்வுகள் தீவகத்தின் சாட்டி பிரதேசத்தில் 2005ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இவ் ஆய்வானது வடஇலங்கைக்கு புதுவெளிச்சம் ஊட்டியது எனலாம். தீவக வரலாறானது தொன்மையானது என்பதனை அங்கு கிடைக்கப்பெற்ற தொல்லியல் எச்சங்கள் உறுதிசெய்கின்றன. அவ் ஆய்வில் ஈமச்சின்னங்கள், சுடுமண்கிணறுகள், பாவனைப்பொருட்கள், சீன,அராபிய மட்பாண்டங்கள், நாணயங்கள் போன்ற பல சான்றுகள் கிடைக்கப்பட்டது. இங்கு கிடைக்கப்பட்ட மட்பாண்டங்கள் கறுப்பு சிவப்பு மட்பாண்டங்கள் ஆகும். இவை பெருங்கற்கால பண்பாட்டை பிரதிபலிக்கின்றது. பெருங்கற்காலம் என்பது பெரிய பெரிய கற்களைக் கொண்டு இறந்தவர்களுக்கு ஈமச்சின்னங்களை அமைத்ததினால் இக் காலம் சிறப்பாக பெருங்கற்காலம் என அழைக்கப்பட்டது.ஏறக்குறைய 1000 ஆம் ஆண்டு தொன்மையானது. இப்பிரதேச ஆய்வில் குடைக்கல், குழியடக்க ஈமச்சின்னங்கள் கிடைக்கப்பெற்றது. இதன் தொன்மையினை சங்ககால புறநானுறு , குறுந்தொகை, நற்றிணை, மலைபடுகடாம் போன்ற இலக்கியங்கள் அதன் தொன்மையினை வெளிப்படுத்துகின்றது. இது தீவக வரலாற்றுக்கு மட்டுமின்றி வடஇலங்கை வரலாற்றுக்கு புதுவெளிச்சம் ஊட்டியது எனலாம். இவ்ஈமச்சின்ங்களுடன் சில வகை மிருகங்கள், பறவைகள், கடல் உயிரினங்கள் எலும்புகளின் தடயங்கள் இப்பிரதேமானது பெருங்கற்கால பண்பாட்டு வழிவந்த சமுதாயத்தின் மூலமாக ஒரு நிலையான ஒரு சமூகம், குடியிருப்பு, பொருளாதாரம், சமயம், கலை அம்சங்கள் இருந்துள்ளதை உறுதிப்படுத்துகின்றது. இதன் ஊடாக சாட்டி பிரதேச பண்டைய மக்களின் வாழ்க்கை முறையினை கண்டறிதல் பிரதான நோக்கமாக உள்ளது. அதனோடு இப்பிரதேச தொல்லியல் ஆய்வுகளின் முக்கியத்துவத்தை கண்டறிவதுடன் அப்பிரதேசத்தில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற தேவையை வெளிப்படுத்துதல் நோக்கமாகும். இவ்வாய்வினை நிறைவு செய்யும் பொருட்டு ஆய்விற்கான முதன்மைத்தரவுகள், கள ஆய்வுகளின் அடிப்படையில் திரட்டப்பட்டவையாகும். அத்துடன் இவ் ஆய்வினை எழுதவதற்கு இரண்டாம் நிலைத்தரவுகளாக நூல்கள், கட்டுரைகள், சஞ்சிகைகள் என்பனவும் உதவியுள்ளன. எனவே சாட்டி பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற தொல்லியல் சான்றுகள் அப்பிரதேச தொன்மையையும் பண்பாட்டு சமய நம்பிக்கைகள், வாணிபம், நினைவுக்கல் அமைக்கும் முறை போன்றவற்றை அறிவதோடு தொடர்ச்சியான தொன்மையான வரலாற்றை அறிய முடிகின்றது. இதனால் இவ் பெருங்கற்கால மையமாக சாட்டி விளங்குவதால் இவ்ஆய்வு முக்கியத்துவம் பெறுகின்றது.
URI: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/6794
ISBN: 978-955-627-013-6
Appears in Collections:11th International Symposium - 2023

Files in This Item:
File Description SizeFormat 
IntSym 2023 Proceedings-358-363.pdf740.05 kBAdobe PDFView/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.