Please use this identifier to cite or link to this item:
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/6619
Full metadata record
DC Field | Value | Language |
---|---|---|
dc.contributor.author | பைறோஸ், எம். எம். | - |
dc.contributor.author | றியாஸா, எம். எச். | - |
dc.date.accessioned | 2023-04-12T05:55:59Z | - |
dc.date.available | 2023-04-12T05:55:59Z | - |
dc.date.issued | 2022-06 | - |
dc.identifier.citation | Kalam, International Research Journal, 15(1), June,2022. Faculty of Arts and Culture, SEUSL. pp.165-171 | en_US |
dc.identifier.issn | 1391-6815 | - |
dc.identifier.issn | 2738-2214 (Online) | - |
dc.identifier.uri | http://ir.lib.seu.ac.lk/handle/123456789/6619 | - |
dc.description.abstract | இவ்வாய்வானது கற்றல்-கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டுச்செயன்முறையில் Bloom’s taxanomy இன் பிரயோக வீச்சினையும் பங்களிப்பினையும் விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்கின்றது. புதிய Bloom’s taxonomy வகைப்பிரித்தலானது ஆறு நிலைகளைக் கொண்டுள்ளது. அதாவது: நினைவில் வைத்தல், விளங்கிக் கொள்ளல், பிரயோகித்தல், பகுப்பாய்வு செய்தல், மதிப்பீடு செய்தல் மற்றும் உருவாக்குதல் என்பனவாகும். இவ்வகைப்படுத்தலானது குறைந்த மட்டத்திலிருந்து உயர் மட்டத்திற்கு நகர்கின்றது. இவ்வாய்வானது Bloom இன் வகைப்படுத்தல், இறுதி மதிப்பீட்டிற்காக எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அடிப்படையாக கொண்டது. இதற்காக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் நடாத்தப்பட்ட வாழ்க்கைக்கான உளவியல் (Psychology for life) பாடத்திற்குரிய இறுதி மதிப்பீட்டுப்பத்திரத்திலிருந்து தரவுகள் பெறப்பட்டன. வினாப்பத்திரத்திலிருந்த வினாக்கள் Bloom இன் வகைப்படுத்தலின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டன. பெறப்பட்ட தரவுகள் Excel மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டன. கடந்த மூன்று வருடங்களில் குறித்த வினாப்பத்திரத்தில் அறிதலாட்சி பரப்பில் கீழ்மட்ட நிலைகளான நினைவில் வைத்தல் மற்றும் விளங்கிக் கொள்ளல் ஆகியவற்றை மதிப்பீடு செய்வதற்கான வினாக்களே அதிகளவு வழங்கப்பட்டுள்ளமை இவ்வாய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் மொத்தப்புள்ளியில் இவற்றுக்கான சதவீதமும் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் விடைத்தாளினை பகுப்பாய்வு செய்கின்றபோது இம்மட்டத்தில் உள்ள வினாக்களுக்கே பொதுவாக 85 வீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் சரியான துலங்கலை காண்பித்துள்ளனர். அறிதலாட்சிப் பரப்பின் உயர்மட்டங்களான பிரயோகித்தல், பகுப்பாய்வு செய்தல், மதிப்பீடு செய்தல் மற்றும் உருவாக்குதல் போன்றவற்றிற்கான வினாக்கள் மிக மிக குறைவு என்பதுடன் இம்மட்டங்களில் வழங்கப்பட்ட ஒரு சில வினாக்களுக்கும் மாணவர்களின் துலங்கல் திருப்திகரமாகக் காணப்படவில்லை. | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | Faculty of Arts and Culture South Eastern University of Sri Lanka, University Park, Oluvil. | en_US |
dc.subject | Bloom’s taxanomy | en_US |
dc.subject | கற்றல்-கற்பித்தல் | en_US |
dc.subject | மதிப்பீடு | en_US |
dc.subject | அறிதலாட்சி | en_US |
dc.title | கற்றல்-கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டுச் செயன்முறைகளை மேம்படுத்துவதில் திருத்தியமைக்கப்பட்ட(Revised) Bloom’s Taxanomy இன் பங்களிப்பு | en_US |
dc.type | Article | en_US |
Appears in Collections: | Volume 15 Issue 1 |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
16. KIRJ 15(1) 165-171.pdf | 577.58 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.