Please use this identifier to cite or link to this item:
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/6000
Title: | முஸ்லிம் குடும்பங்களில் வீட்டு வன்முறைகள்: கொழும்புப் பிரதேச நேர்வு நிலை பற்றிய கள ஆய்வு |
Other Titles: | Domestic violence in Muslim families: a case study in Colombo district |
Authors: | Hilma, L. F. Jazeel, M. I. M. |
Keywords: | முஸ்லிம் குடும்பங்கள் வீட்டு வன்முறைகள் கொழும்புப் பிரதேசம் பஸ்ஹ் விவாகரத்துகள் |
Issue Date: | 23-Nov-2021 |
Publisher: | Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka |
Citation: | Sri Lankan Journal of Arabic and Islamic Studies, 4(1) : 1-11. |
Abstract: | வீட்டு வன்முறையின் சமூகத் தாக்கங்கள் வலுவானது. அது முரண்பாட்டைத் தோற்றுவித்து குடும்ப சிதைவை விவாகரத்தை விளைவாக்கிறது. வன்முறையைச் சூழலை தடுத்துள்ள இஸ்லாத்தை மார்க்கமாகக் கொண்ட முஸ்லிம் குடும்பங்களிலும் அது காணப்படுகின்றது. அதிகளவு விவாகரத்துக்கள் இடம் பெறும் கொழும்புப் பிரதேசத்தில் முஸ்லிம் குடும்பங்களில் பஸ்ஹ் விவாகரத்துக்கள் அதிகரித்துக் கொண்டு செல்வதை காழி நீதிமன்ற அறிக்கை உணர்த்துகின்றது. இந்நிலையில் கொழும்பு பிரதேச முஸ்லிம் குடும்பங்களில் இடம் பெறும் வீட்டு வன்முறைகளையும் அவற்றுக்கான காரணங்களையும் பரிசீலிப்பதை இவ்வாய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. பண்பு ரீதியான ஆய்வு முறையினைக் கொண்டுள்ள இந்த ஆய்வு நேர்காணல் மூலம் பெறப்பட்ட முதலாம் நிலைத்தரவுகளுக்களின் பகுப்பாய்வினை பெரிதும் பயன்படுத்துகிறது. காழி நீதிமன்ற ஆவணங்கள், பதிவுப் புத்தகங்கள் மீளாய்வையும் துணையாகக்கொண்டுள்ளது. கொழும்புப் பிரதேச முஸ்லிம் குடும்பங்களில் ஒப்பீட்டளவில் அதிகளவான முரண்பாடுகள் தோன்றுவதற்கு பிரதான காரணம் போதைப் பாவணை. அதனுடன் முறையே தவறானத் தொடர்புகள், உணர்வுச் சிக்கல்கள், வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடி அதனால் ஏற்பட்ட கடன் சுமை என்பன குடும்பங்களில் முரண்பாட்டு காரணிகளாக அமைந்து காலப்போக்கில் வன்முறையாக பரினமிக்கின்றன. இஸ்லாம் கற்றுத் தந்த குடும்பவியல் கூறுகள் அக்குடும்பங்களில் முறையாகப் பேணப்படாமை இவை அனைத்திற்கும் தலையாய அம்சம் எனலாம். விளைவாக அக்குடும்பப் பெண்கள் உடல், உள, பொருளாதார மற்றும் வாய்மொழி ரீதியிலும் வன்முறைக்குள்ளாகியுள்ளன. மேலும் அது உடல், உள, பொருளாதார மற்றும் சமூக ரீதியிலும் அவர்களை பாதிப்படையச் செய்துள்ளது. முஸ்லிம் குடும்பங்களில் இடம் பெறும் வன்முறைகள் பற்றி அறியவும் அவற்றுக்கான காரணங்களை கண்டறிந்து வன்முறையை தடுக்கவும் சமூக ஆர்வளர்கள், சட்ட அதிகாரிகள், உளவள ஆலோசகர்கள் போன்றாருக்கு இவ்வாய்வானது துணைபுரியவல்லது. |
URI: | http://ir.lib.seu.ac.lk/handle/123456789/6000 |
ISSN: | 2550:3014 |
Appears in Collections: | Volume 4; Issue 1 |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.