Please use this identifier to cite or link to this item:
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5277
Full metadata record
DC Field | Value | Language |
---|---|---|
dc.contributor.author | பாத்திமா பிர்தௌஸியா, ஹாஸிம் | - |
dc.date.accessioned | 2021-01-27T16:26:41Z | - |
dc.date.available | 2021-01-27T16:26:41Z | - |
dc.date.issued | 2020-06 | - |
dc.identifier.citation | KALAM -International Research Journal, 13(2),2020 pp.111-133. | en_US |
dc.identifier.issn | 13916815 | - |
dc.identifier.issn | 27382214 | - |
dc.identifier.uri | http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5277 | - |
dc.description.abstract | கலாசார பண்பாட்டு அடித்தளத்திலிருந்து ஆய்வு செய்யப்பட்டுள்ள இவ்வாய்வானது, 20ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் கண்டி முஸ்லிம்களது திருமணச் சம்பிரதாயங்களை அடையாளப்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது. அதற்காக கண்டி மாவட்டம், பாத்ததும்பறை தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட உடத்தலவின்னை மடிகே எனும் கிராமத்தை அடிப்படையாகக்கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வானது உடத்தலவின்னை கிராமத்தில் முன்னைய நூற்றாண்டில் திருமணம் தொடர்பாக நிலவிய பல்வேறு சடங்குகள், சம்பிரதாயங்கள் பற்றி அறிந்து கொள்வதை நோக்காகக் கொண்டமைந்துள்ளது. அத்தோடு குறித்த சம்பிரதாயங்களில் ஊடுருவியிருந்த மாற்றுமத கலாசார அம்சங்கள் பற்றியும் அச்சடங்குகளில் வெளிப்பட்ட ஏனைய சமூகங்களுடனான சகவாழ்வுப் பண்புகளையும் இவ்வாய்வின் மூலம் கண்டறிவதும் முக்கிய நோக்கமாகும். குறித்த கிராமம் தொடர்பாக இது வரையில் எவ்வித வரலாற்றுத் தொகுப்பும் உருவாக்கப்பட்டிருக்காத நிலையில், இவ்வாய்வானது ஒரு குழுக்கலந்துரையாடலுடன் நேர்காணல்களைப் பிரதானமாகக்கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டாந்தர மூலாதாரங்களாக ஆய்வுக்கட்டுரைகளும் நூல்களும் இணையமும் பயன்படுத்தப்பட்டு இவ்வாய்வு நிறைவு செய்யப்பட்டுள்ளது. இம்மக்களிடம் திருமணப் பேச்சுவார்த்தை முதல் திருமணத்திற்கு முன்னரான நாட்களிலும் மற்றும் திருமண நாளிலுமாக பல்வேறு சம்பிரதாயங்கள் நிலவியுள்ளதுடன், இச்சம்பிரதாயங்கள் குறித்த மணமகளது முதல் பிரசவம் வரையில் வெவ்வேறாக தொடரப்பட்டுள்ளதை ஆய்வில் கண்டறிய முடிந்தது. அத்தோடு ஊரில் உள்ள சக சமூகத்தவர்களையும் இணைத்தவாறு பரஸ்பரம் உதவி ஒத்தாசைகளை பெற்றும் வழங்கியும் இச்சம்பிரதாயங்கள் பின்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறான சமூக வழக்காறுகள் ஊடாக உடத்தலவின்னை கிராம மக்கள் மத்தியில் இன, மத பேதங்களும் விரிசல்களும் ஏற்படாது சமூகங்களிடையில் நல்லிணக்கத்தின் அடிப்படையில் உறவு வளர்க்கப்பட்டு வந்துள்ளமையையும் இவ்வாய்வின் மூலம் அறிய முடிந்தது. மேலும் இத்திருமண சம்பிரதாயங்களுள் பெரும்பாலானவை சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களுடனான உறவுகளால் ஏற்பட்ட பண்பாட்டுச் செல்வாக்குகளாக அடையாளப்படுத்தவும் முடிந்துள்ளது. மேலும் தற்காலத்தில் இவ்வூரில் நடைமுறையில் உள்ள சில திருமண சம்பிரதாயங்கள் 20ஆம் நூற்றாண்டின் தொடர்ச்சியாக தலைமுறைகள் கடந்து செல்வாக்கு பெற்றுள்ளமையையும் தெளிவுற முடியுமாக இருந்தது. | en_US |
dc.language.iso | en_US | en_US |
dc.publisher | Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka | en_US |
dc.subject | உடத்தலவின்னை மடிகே | en_US |
dc.subject | திருமணம் | en_US |
dc.subject | மணமகன் | en_US |
dc.subject | மணமகள் | en_US |
dc.subject | சம்பிரதாயங்கள் | en_US |
dc.title | 20ஆம் நூற்றாண்டில் கண்டி முஸ்லிம்களது திருமண சம்பிரதாயங்கள்: உடத்தலவின்னை மடிகே கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு | en_US |
dc.type | Article | en_US |
Appears in Collections: | Volume 13 Issue 2 |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
11. K2020 (111-133).pdf | 356.81 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.