Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5109
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorMasliya, A. L.-
dc.contributor.authorNasrin, M. I.-
dc.date.accessioned2020-12-21T09:23:26Z-
dc.date.available2020-12-21T09:23:26Z-
dc.date.issued2020-12-22-
dc.identifier.citation7th International Symposium - 2020 on “The Moderate Approach to Human Development through Islamic Sciences and Arabic Studies” pp.594 - 606.en_US
dc.identifier.isbn9789556272529-
dc.identifier.urihttp://ir.lib.seu.ac.lk/handle/123456789/5109-
dc.description.abstractசமீப கால இலங்கையில் அதிகரித்து வரும் ஓர் சமூகப் பிரச்சனையாக சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் காணப்படுகின்றது சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பினும் நாளுக்கு நாள் இச் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகமானது இடம்பெற்று வருகின்றமையை காணக்கூடியதாக உள்ளது. அண்மைக்காலமாக வாழைச்சேனை நீதி நிர்வாகப் பிரிவுகளில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகமானது அதிகரித்துள்ளது குறிப்பாக COVID -19 தொற்றுக் காலப்பிரிவில் இவை தொடர்பான சம்பவங்கள் அதிகளவாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை அறிய முடிந்தது. இவ் ஆய்வின் மூலமாக சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களில் அநேகமானவை நெருங்கிய உறவினர்கள்: பராமரிப்பாளர்கள் மற்றும் அயலவர்கள்(91மூ)மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையை கண்டறிய முடிந்தது. இதனால் சிறுவர்கள் பலாக்காரப்படுத்தப்படுவதுடன் பல்வேறு உடல் மற்றும் உளத் தாக்கங்களுக்குள்ளாகியுள்ளனர். அத்துடன் சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளிலும், உள விருத்தியிலும் மற்றும் ஆளுமை விருத்தியிலும் பல்வேறு பாதிப்பைச் செலுத்திவருகின்றது. இவ்வாய்வானது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கான காரணிகளைக் கண்டறிந்து அவற்றை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதையும், அதற்கான தீர்வுகளை இனங்காண்பதையும் எதிர்காலத்தில் ஏற்படும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களைக் குறைப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாய்வானது விபரணஇ விளக்க மற்றும் பகுப்பாய்வு முறை என்பனவற்றின் துணைகொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுக்கான தரவுகள் பண்புரீதியான முறை (Qualitative method), தொகை ரீதியான முறை (Quantitative method) மூலம் பெறப்பட்டுள்ளதோடு முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலை மூலகங்களிலிருந்தும் பெறப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத்தரவில் பிரதேச செயலக பதிவேடுகள், சிறுவர் நன்னடத்தை நிறுவனங்களின்; முறைப்பாட்டுப் பதிவுகள் என்பவற்றினூடாகவும், இணையத்தளம் மற்றும் நூல்கள், சஞ்சிகைகள் என்பவற்றிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டன. இவ்வாய்வின் முடிவாக, வாழைச்சேனை நீதி நிர்வாகப்பிரிவுகளில் அண்மைக் காலங்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதால் சிறுவர்கள் உடலியல் மற்றும் உளவியல் ரீதியான பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். எனவே,இப்பிரதேசத்தில் நிகழும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கான காரணங்களைக் கண்டறிந்து மக்களுக்குத் தெளிவுபடுத்துவதனுடாக சிறுவர் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதலும் அதற்கான தீர்வுகளைக் கண்டறிந்து அதனைக் குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி இவ்வாய்வு ஆராய்ந்து தெளிவுபடுத்துகிறது.en_US
dc.language.isoen_USen_US
dc.publisherFaculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka.en_US
dc.subjectCOVID-19en_US
dc.subjectசிறுவர் துஷ்பிரயோகம்en_US
dc.subjectஉளவியல் பிரச்சினைகள்en_US
dc.subjectசிறுவர் பாதுகாப்புen_US
dc.subjectவாழைச்சேனை நீதி நிர்வாகப் பிரிவுகள்en_US
dc.titleஅதிகரித்து வரும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகமும் அதற்கான காரணங்களும்: மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை நீதி நிர்வாகப் பிரிவுகளை மையப்படுத்திய ஆய்வுen_US
dc.title.alternativeThe reasons for the rapid Increase in child abuse: A Study based on Valaichenai judicial & administrative divisions in Batticaloa districtsen_US
dc.typeArticleen_US
Appears in Collections:7th International Symposium of FIA-2020

Files in This Item:
File Description SizeFormat 
Final Proceedings of fiasym2020 - Page 608-620.pdf379.63 kBAdobe PDFThumbnail
View/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.