Please use this identifier to cite or link to this item:
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/3209
Full metadata record
DC Field | Value | Language |
---|---|---|
dc.contributor.author | Nazhath, A.N. Nazlin | - |
dc.date.accessioned | 2018-09-27T09:59:31Z | - |
dc.date.available | 2018-09-27T09:59:31Z | - |
dc.date.issued | 2018-06-26 | - |
dc.identifier.citation | 6th South Eastern University Arts Research Session 2017 on "New Horizons towards Human Development ". 26th June 2018. South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka. pp.379-390. | en_US |
dc.identifier.issn | 2651 - 0219 | - |
dc.identifier.uri | http://ir.lib.seu.ac.lk/handle/123456789/3209 | - |
dc.description.abstract | சர்வதேச உறவுகளில் முழுமையாகவும் முறையாகவும் பங்கேற்பதற்கு ஏற்ற வகையில், ஒவ்வொரு நாடும் தனக்கென தனியான ஒரு வெளிநாட்டுக் கொள்கையை கொண்டு இயங்கி வருகின்றது. இந்தவகையில், இலங்கையின் வெளிநாட்டு உறவுகள் இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திரம் மற்றும் வர்த்தக உறவினை வெளிப்படுத்திக் காணப்படுகின்றது. கடந்த முப்பது ஆண்டு காலமாக இலங்கையில் இடம்பெற்ற இன மோதலினைத் தொடர்ந்து இலங்கை அரசானது, பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்யுத்த முடிவானது இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. யுத்தக் காலப்பகுதியில் சீனா இலங்கையில் செலுத்திய செல்வாக்கின் காரணமாக இராணுவ முரண்பாடானது முடிவினைத் தழுவியது. யுத்த காலப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் காணப்பட்ட உறவு நிலையானது யுத்த முடிவினை தொடர்ந்தும் வளர்ச்சியடைந்து வருகின்றது. யுத்த முடிவினை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமானது சீனாவுடனான உறவினை மேலும் வளர்ப்பதில் கவனம் செலுத்தியதுடன் சீனா, யுத்த முடிவினை தொடர்ந்து நாட்டினை மீள கட்டியெழுப்புவதற்கு பாரிய பங்களிப்புக்களையும் ஒத்துழைப்புக்களையும் இலங்கை அரசிற்கு வழங்கி வருகின்றது. நாட்டின் சமூக, பொருளாதார, பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் பேணுவதற்காக சீனாவுடனான உறவுகள் மேலும் வலுப்பெற்றன. யுத்தத்தின் பின்னரான இலங்கை அரசின் சீனா சார்பான இவ்வெளிநாட்டுக் கொள்கையானது உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 2009–2015 வரையிலான இலங்கை அரசாங்கத்தின் சீனா சார்பான வெளிநாட்டுக் கொள்கையானது எவ்வாறான மாற்றங்களை இலங்கை அரசியலில் ஏற்படுத்தியுள்ளது என்பதனை கண்டறிதல் என்ற நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக முதனிலைத் தரவுகளாக நேர்காணல், வரையறுக்கப்பட்ட அவதானம் போன்றனவும் இரண்டாம் நிலைத் தரவுகளாக முன்னைய ஆய்வுகள், நூல்கள், சஞ்சிகைகள், புள்ளிவிபரங்கள் போன்றனவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, யுத்தத்தின் பின் சீனாவுடனான நெருங்கிய உறவானது இலங்கையின் அரசியல், பொருளாதார, இராஜதந்திர ரீதியில் உள்நாட்டிலும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கு எதிரான மனித உரிமை ஆணைக்குழு மற்றும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடனான உறவின் விரிசல் போன்றன சர்வதேச அளவிலும் பாரிய தாக்கத்தினை செலுத்தியுள்ளன. | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka. | en_US |
dc.subject | யுத்தத்திற்குப் பிந்நதிய இலங்கை | en_US |
dc.subject | சீனா | en_US |
dc.subject | வெளிநாட்டுக் கொள்கை | en_US |
dc.subject | சர்வதேச உறவுகள் | en_US |
dc.title | 2009 – 2015 வரையான காலப்பகுதியில் இலங்கை சீன உறவுகள் | en_US |
dc.type | Article | en_US |
Appears in Collections: | SEUARS - 2017 |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
Proceedings of Articles - Page 388-399.pdf | 810.87 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.