Please use this identifier to cite or link to this item:
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2312
Full metadata record
DC Field | Value | Language |
---|---|---|
dc.contributor.author | Rumaiza, M.B.F. | |
dc.contributor.author | Sarjoon, R.A. | |
dc.date.accessioned | 2017-02-13T05:04:44Z | |
dc.date.available | 2017-02-13T05:04:44Z | |
dc.date.issued | 2013-04-09 | |
dc.identifier.citation | First Undergraduate Colloquium. 09th April, 2013, South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka, pp. 23-24. | en_US |
dc.identifier.isbn | 978-955-627-041-9 | |
dc.identifier.uri | http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2312 | |
dc.description.abstract | இன்று உலகளாவிய முஸ்லிம் சமூகம் வறுமை என்னும் கொடிய நோயினால் பீடித்கப்பட்டு நலிந்த ஒரு சமூகமாக மாறியுள்ளது. வறிய மக்களது வாழ்வாதாரத்தில் முன்னேற்றங்கள் கொண்டு வருதற்கான நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவை முற்று முழுதான வறுனம ஒழிப்புக்கு ஏதுவாக அமையயவில்லை. ஆனால் ஸகாத் எனும் இஸ்லாமிய வறுனம ஒழிப்புத் திட்டத்தின் மூலம் வறிய மக்களது வாழ்வாதாரத்தில் பல முன்னேற்றங்களை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள்டூ மேற்கொள்ளப்பட்டன. வறுமை ஒழிப்பில் ஸகாத் நிதியத்தின் பங்களிப்பு - புத்தளம் பிரதேசத்தை மையப்படுத்திய ஒரு சமூகவியல் ஆய்வு எனும் தலைப்பில் மேற்கொள்ளப்படும் இவ்வாய்வானது, புத்தளம் பிரதேச மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதில் ஸகாத்தின் பங்களிப்பு எவ்வாறு காணப்படுகின்றது என்பதை ஆராய்வதே ஆய்வுப் பிரச்சினையாக கொள்ளப்படுகிறது. இப்பிரதேச ஸகாத் செயற்பாடுகளின் நடைமுறையைக் கண்டறிந்து, கல்வி, பொருளாதார மற்றும் சமூக ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவதில் ஸகாத்தின் பங்கினை மதிப்பீடு செய்வதை நோக்காகக் கொண்டே இவ்ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இது ஒரு சமூகவியல் ஆய்வு என்பதனால் முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலை தரவு சேகரிப்பு முறைகளைப் பயன்படுத்தி இவ்வாய்வுக்குத் தேவையான தரவுகள் பெறப்பட்டன. முதலாம் நிலைத் தரவுகள் வினாக்கொத்து முறையைப் பயன்படுத்தி பெறப்பட்டன. மஹல்லலாவாரியாக எளிய எழுமாற்று மாதிரி எடுப்பின் மூலம் 60 பேரை தெரிவு செய்து அவர்களுக்கு வினாக்கொத்துக்கள் வழங்கப்பட்டதுடன் அவற்றில் 51 வினாக்கொத்துக்கள் மீளப்பெறப்பட்டு அதனடிப்படையிலும் நேர்காணல், அவதானம் போன்றவற்றில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் பின்னணியிலும் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டாம் நிலைத்தரவுகள் புத்தளப் பிரதேச பைதுஸ் ஸகாத்தின் பதிவேடுகள், புள்ளிவிபரங்கள் என்பவற்றினூடாகவும், இணையத்தளம் மற்றும் நூல்கள், சஞ்சிகைகள் என்பவற்றினூடாகவும் பெற்றுக்கொள்ளப்பட்டன. மேற்கண்ட பல தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இவ்ஆய்வு ஐந்து அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் உள்ளடக்கப்பட்டுள்ள தலைப்புக்கள் ஆய்வின் கருதுகோளுடன் தொடர்புபட்டதாக விளங்குகின்றன. வீடமைப்பு. கல்வி சகாய நிதி, நஸ்ருல் ஹஸன், சுயதொழில் ஊக்குவிப்பு என்பவற்றினூடாக புத்தளம் பைதுஸ் ஸகாத் அமைப்பானது வறுமையை ஒழிப்பதில் ஓரளவு வெற்றி கண்டுள்ளது. என்பதை இவ்ஆய்வின் மூலம் கண்டறியக் கூடியதாக இருந்தது. மேலும் வறுமை ஒழிப்பிற்கு ஸகாத்தை கூட்டாகச் சேகரித்து, விநியோகித்தல் சிறந்த பயனை அளிக்கும் என்பதும் புலனாகியது. அத்துடன் ஸகாத் பற்றிய போதிய தெளிவின்மை, ஸகாத் வழங்குவோர் நிஸாப் பற்றிய தெளிவின்மை குறைந்த தொாகையை வழங்குகின்றமை. குடும்பத்தினர். பணியாளர்கள் போன்றோருக்கு மாத்திரம் ஸகாத்தை கொடுத்து சுருக்கிக் கொண்டமை, ‘ஸகாத் ஒரு கூட்டுக்கடமை’ என்ற முக்கியத்துவத்தைப் பற்றிய அறிவின்மை, ஸகாத் நிறுவனத்னதப் பற்றிய விமர்சனங்கள், நிர்வாகிகளின் அசமந்தப் போக்கு போன்ற பல சவால்களை ஸகாத் நிதியம் எதிர்நோக்கி வருகிறது என்பதை இணங்காணக்கூடியதாக இருந்தது. எனவே கருதுகோளினை மெய்ப்பிக்கும் வகையில் இவ்வாய்வானது சிறப்புற அமைய எல்லா வகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாய்விலிருந்து புத்தளம் பைதுஸ் ஸகாத் நிதியமானது வறுமை ஒழிப்பில் ஒரளவு பங்காற்றியுள்ளது என்பது தெளிவுபடுத்தப்படுகின்றது. | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka | en_US |
dc.subject | ஸகாத் | en_US |
dc.subject | வசூலிப்பு | en_US |
dc.subject | விநியோகம் | en_US |
dc.subject | வறுமை | en_US |
dc.title | வறுமை ஒழிப்பில் புத்தளம் ஸகாத் நிதியத்தின் பங்கு | en_US |
dc.type | Article | en_US |
Appears in Collections: | FIA Colloquium 2013 |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
ABSTRACTS 9TH APRIL 2013-14.pdf | 68.03 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.