Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2231
Title: அனர்த்த முகாமைத்துவச் செயற்பாடுகளில் நிறுவனங்களின் பங்களிப்பு: யாழ்ப்பாண மாவட்டத்தைச் சிறப்பாகக்கொண்ட ஆய்வு
Authors: மதிவதனி, விநாயகமூர்த்தி
Issue Date: Dec-2013
Publisher: Faculty of Arts & Culture, South Eastern University of Sri Lanka
Citation: Kalam: Research Journal of Faculty of Arts & Culture, 7: 132-146.
Abstract: அனர்த்த முகாமைத்துவச் செயற்பாடுகள் உலக நாடுகளில் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதேநேரம் இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அனர்த்த முகாமைத்துச் செயற்பாடுகள், முயற்சிகள் போன்றன குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன. இதனால் இப்பிரதேசத்தில் அனர்த்த முகாமைத்துவச் செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியமாக உள்ளது. இதற்கு நிறுவனங்களின் நூறு வீதமான வினைத்திறனான செயற்பாடுகள் முக்கிய தேவையாகவும் அவசியமானதாகவும் உள்ளது. அனர்த்த முகாமைத்துவம் என்பது தனியொரு துறையினை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தாமல் பல துறைகளினை உள்ளடக்கியதாக இருக்கின்றது. இதன் காரணமாக அனைத்து துறைகளினையும் உரிய நேரத்தில் இணைத்து செயற்படுவதற்கு இந்நிறுவனங்களின் பங்களிப்பானது இன்றியமையாத அம்சமாக இருக்கின்றது. இதனால் நிறுவனங்களின் அனர்த்தத்திற்கு முன்னரான மற்றும் அனர்த்தத்திற்குப் பின்னரான நடவடிக்கைகளில் அவற்றின் பங்களிப்பினை அறிந்துகொள்ளல், அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகளில் ஈடுபடும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களை அடையாளங்காணல், அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகளை வினைத்திறனாக மேற்கொள்வதற்கான திறமுறைகளை முன்வைத்தல் என்பவற்றை நோக்காகக்கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
URI: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2231
ISSN: 1391-6815
Appears in Collections:Volume 07

Files in This Item:
File Description SizeFormat 
KALAM Volume - VII (Final) (1) - Page 132-146.pdfArticle 15938.74 kBAdobe PDFThumbnail
View/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.