Please use this identifier to cite or link to this item:
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/1493
Title: | மியன்மாரில் ஜனநாயகப் படுத்தலில் ஆங் சாங் சூகியின் பங்களிப்பு |
Authors: | Sathana, Vijayarasa |
Keywords: | ஜனநாயகம் இராணுவம் சர்வதேசம் ஆங் சாங் சூகி அரசியல் உணர்வுகள் |
Issue Date: | 2-Aug-2014 |
Publisher: | South Eastern University of Sri Lanka, University Park, Oluvil #32360, Sri Lanka |
Citation: | Proceedings of 4th International Symposium 2015 on " Emerging Trends and Challenges on Sustainable Development”, p. 34 |
Abstract: | மியன்மார் மிக நீண்டகாலம் இராணுவ கட்டமைப்பின் கீழ் வளர்த்தெடுக்கப்பட்டு வந்தது. அவ்வாறான இராணுவ அரசியல் வாதம் மேலோங்கிய நிலையில் சிவிலியங்களின் வாழ்க்கை முறைகள் பெரிதும் அடக்கு முறைக்கு உட்படுத்தப்பட்டும் இராணுவ மனோநிலை மேலோங்கிய நிலையில் வாழ்க்கை முறைமைகள் வடிவமைக்கப்பட்டும் வந்திருந்தமையினை மியன்மாரின் நவீன அரசியல் வரலாறு எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. இந் நிலையில் பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் இராணுவ நடைமுறையின் பின்னணியில் கட்டுப்படுத்தப்பட்டு வந்தமையினால் சிவிலியன்களது ஜனநாயக உணர்வுகளுக்கு மதிப்பளிக்க முடியாத ஓர் அரசியல் சூழல் தோற்றம் பெற்றிருந்தது. இத்தகைய ஓர் அரசியல் சூழலை மிகவும் மன உறுதியுடன் எதிர் கொண்டு இராணுவ ஆட்சியாளர்களின் கொடூர தன்மையினை ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்தி தனது ஆளுமையின் பலத்தை அதிகரிக்க செய்து இன்று மியன்மாரில் ஜனநாயக அடிப்படையிலான மக்களது சிவில் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு சிறப்பு உதாரணமாக விளங்கிய ஆங் சாங் சூகியினது அரசியல் பங்களிப்பை ஆராய்வதாக இவ் ஆய்வுக்கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது. அவரது பரந்த பங்களிப்பின் மத்தியில் ஜனநாயகத்தை சர்வதேச ஒத்துழைப்புடன் எவ்வாறு மியன்மாரில் மீண்டும் ஸ்தாபித்தார் என்பதனை ஆராய்வதாகவே இக் கட்டுரை அமைந்துள்ளது. இங்கு மூன்று முக்கியமான அலகுகள் எடுத்தாளப்படுகின்றன. 1. சூகி எதிர்கொண்ட இராணுவ அடக்குமுறையின் தன்மைகள் . 2. சர்வதேசத்திற்கு அந்த நிலைமைகள் எடுத்துக்காட்டப்பட்ட விதம் . 3. ஒரு பாரளுமன்ற ஜனநாயக வாதியாக அவர் பலப்படுத்திக்கொண்ட விதம். இந்த மூன்று அடிப்படைகளில் இருந்தே ஆங் சாங் சூகியின் ஜனநாயக மயப்படுத்துக்கான பங்களிப்பினை ஆராய விளைகின்றேன். |
URI: | http://ir.lib.seu.ac.lk/handle/123456789/1493 |
ISBN: | 978-955-627-053-2 |
Appears in Collections: | 4th International Symposium - 2014 |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
4 th Int Symp_2014_Article_20_Pages from 160-165.pdf | Article 20 | 768.91 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.